பைக் டாக்சியில் சென்ற மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது.!
bike taxi driver arrested for harassment to student in chennai
பைக் டாக்சியில் சென்ற மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது.!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 'பைக் டாக்சி' சேவை அமலில் உள்ளது. ஆண்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டினாலும் பெண்கள் தயக்கமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இரவு 'பைக் டாக்சி'யில் முன்பதிவு செய்து பயணம் செய்தார்.
இந்த வாகனத்தை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் ஓட்டியுள்ளார். இவர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி ரமேஷ் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்தார்.
இதற்கிடையே அந்த மாணவி வாலிபர் அத்துமீறியதை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததோடு, அதனை தனது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் உடனே ராயப்பேட்டைக்கு வந்துள்ளனர்.
அங்கு தனது மகள் வாகனத்தில் இருந்து இறங்கியபோது மனைவியின் பெற்றோர்கள் ஓட்டுநர் ரமேஷை, பிடித்து வைத்துக்கொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், அவருடைய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் ரமேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பகலில் வேலை பார்த்து விட்டு 'பைக் டாக்சி' ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
English Summary
bike taxi driver arrested for harassment to student in chennai