பாஜகவின் வளர்ச்சிக்கு நடிகர் விஜய் உதவுகிறார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தேசிய கல்விக் கொள்கையை காப்பி, பேஸ்ட் செய்து மாநில கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், திமுகவின் கொள்கை சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுத்தால் அது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தெரிவிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்பது தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. இந்தி திணைக்கப்படுவதாக கூறும் திமுக தனது மாநில கல்விக் கொள்கையில் உருதுவை திணித்துள்ளது. 

நீட் தேர்வு எதிர்ப்பை வைத்து திமுக தனது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வினால் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்தனர் என தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுத்தால் சந்தோஷம்தான். பாஜக மட்டும் அப்போது தனித்து நிற்கும். திமுக சார்ந்த கொள்கையுடன் விஜய் பேசி இருப்பது, பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். 

நீட் தொடர்பாக இன்னும் பல தரவுகளை வைத்துக் கொண்டு விஜய் பேசினால் நல்லதாக இருந்திருக்கும். இருமொழி கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு என எல்லா கட்சிகளும் கொள்கை மாதிரி வைத்துக் கொள்ளட்டும். பாஜக மட்டும் முன்மொழிக் கொள்கை, நீட் ஆதரவு என்ற தெளிவான கொள்கையுடன் பயணிக்க உள்ளது. 

நீட் வேண்டும் என்று நினைக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள். மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்விக் கற்றுத் தரப்படும் என்று கூறுவது, குலக்கல்வி இல்லையா? விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி என்றால் மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளதும் குலக்கல்விதான். 

தேசிய கல்விக் கொள்கையை கட், காப்பி & பேஸ்ட் செய்து மாநில கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Say about VIJAY DMK Politics


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->