வல்லபாய் படேலை இந்தியாவை தாண்டினால் யார் என்றே தெரியாது! அவருக்கு எதற்கு 3000 கோடியில் சிலை!
BJP has erected a statue of Vallabhbhai Patel for lifting the ban on the RSS movement that shot Gandhi
காந்தியை சுட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தடையை 16 மாதங்களில் நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு பாஜக சிலை வைத்துள்ளது!
நேற்று தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் அவருடைய திருவுருவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது "காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு தடை கேட்கிறார்கள். தேசபக்தி உள்ளவர்கள் பேரணி நடத்துகிறார்கள் என சொல்கிறீர்கள்" அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான் " காந்தி புகைப்படத்தை வைத்து போலி துப்பியாக்கியால் சுட்டு செருப்பால் அடித்த ஆர்எஸ்எஸ் கும்பல் காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துகிறது. காந்தி பொதுவானவர் என்றால் சாவர்க்கர் எதற்கு வருகிறார். காந்தியும் சாவர்க்கரும் ஒன்றா? கோழைக்கு வீர சாவர்க்கர் என பெயர் வைத்துள்ளார்கள்.
இவர்கள் எப்படி காந்தியைப் பற்றி பேச முடியும். காந்தி பொதுவானவர் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எதற்கு 3000 கோடியில் சிலை வைக்க வேண்டும். இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும் தான். இது சின்ன குழந்தைக்கும் தெரியும். ஆனால் பிஜேபிக்கும் பிரதமர் மோடிக்கும் தெரியவில்லை.
இந்தியாவை தாண்டினால் வல்லபாய் பட்டேல் யார் என்றே பலருக்கு தெரியாது. அவருக்கு எதற்காக சிலை வைக்க வேண்டும். காந்தியை சுட்டதற்காக ஆர்எஸ்எஸை தடை செய்து வைத்திருந்தனர். அந்தத் தடையை வைஸ்ராயராக இருக்கும் போது 16 மாதங்களில் தடையை நீக்கினார். அந்த நன்றி கடனுக்காக வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளனர் என பதில் அளித்தார்.
English Summary
BJP has erected a statue of Vallabhbhai Patel for lifting the ban on the RSS movement that shot Gandhi