நடைப்பயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நடைப்பயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை - நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பங்காரு அடிகளார் மறைவை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என்மண் என் மக்கள்' நடைபயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு பாஜக கட்சி நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader annamalai postpond en man en makkal programme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->