இதெல்லாம் வெட்கக்கேடு! இதுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொல்லப் போகிறீர்களா? பாஜக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு தமிழக அரசின் நிதி நிலைமை தள்ளப்பட்டுள்ளது வெட்கக்கேடானதல்லவா? என்று, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உயர் கல்வி துறை மிக சிறப்பாக விளங்கி கொண்டிருக்கிறது என்று மார் தட்டிக் கொள்ளும்  திராவிட மாடல் திமுக தமிழக அரசே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் மூன்று மாதங்களாக சம்பளம் கொடுக்காது இருப்பது தான் திராவிட மாடலா? 

இது தான் கல்வியில் சிறந்து விளங்கும் அழகா?  தமிழகம் பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்குவதாக பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசே, மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு கூட  சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு  தமிழக அரசின் நிதி நிலைமை தள்ளப்பட்டுள்ளது வெட்கக்கேடானதல்லவா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகழகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் உடனடியாக ஊதியம் அளிப்பது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பு. 

இல்லையேல் நிதி நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு தமிழக அரசே ஆட்சியை விட்டு வெளியேறு.

குறிப்பு : இதற்கும் மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொள்ள நினைக்க வேண்டாம் என்று, நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Condemn to TNgovt DMK Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->