புதுக்கோட்டையில் பரபரப்பு - பாஜக மகளிரணி தலைவியின் கணவர் வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


சொத்து தகராறில் புதுக்கோட்டை பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. விவசாயியானஇவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். அதில், சாமிக்கண்ணு என்பவருக்கு சரியான முறையில் சொத்து பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் நேற்று தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் இந்தத் தகராறு கைகலப்பாக மாறியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது தாத்தா ரெங்கசாமியை அரிவாளில் வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற ரெங்கசாமியின் மற்றொரு மகன் வேலுவுக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. 

இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்ததை பார்த்த ராஜேஷ் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த வேலுவின் மனைவியும், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியான திருப்பதி பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு உள்ளிட்ட இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வேலு பரிதாபமாக உயிரிழந்தார். ரெங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp woman leader husband murder in putukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->