கன்னியாகுமரியில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து....சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...காரணம் என்ன?
Boat traffic stopped in Kanyakumari tourists disappointed what is the reason
தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.இந்தநிலையில், கடல் நீர் மட்டம் தாழ்வின் காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடலின் தன்மையைப் பொறுத்து சுற்றுலா படகு சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஏராளாமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை வார விடுமுறை என்பதால் கடலின் நீர்மட்டத்தை பொறுத்தே படகு இயக்க உள்ளதால், அங்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
English Summary
Boat traffic stopped in Kanyakumari tourists disappointed what is the reason