மனைவியை கிண்டல் செய்த சிறுவனை தட்டிக்கேட்ட கணவர்.! ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மனைவியை கிண்டல் செய்த சிறுவனை தட்டிக்கேட்ட கணவர்.! ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சித்ரா நேற்று மாலை அதேபகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அதேபகுதியை சேர்ந்த பதினேழு வயது சிறுவன் ஒருவர் கஞ்சா போதையில் சித்ராவை கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சித்ரா தனது கணவர் விஜயிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட விஜய், மனைவியை கிண்டல் செய்த சிறுவனை சந்தித்து எதற்காக எனது மனைவியை கிண்டல் செய்தாய்? என்றுத் தட்டிக்கேட்டதோடு, அவனை கத்தியால் கழுத்தில் கீறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கஞ்சா போதையில் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, பதிலுக்கு விஜய் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால், விஜய் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஜய் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy arrested for kill man in viruthachalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->