பாம்பு தீண்டியவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம்.. அரசு மருத்துவரால் 8 வயது சிறுவன் உயிரிழப்பு...!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்த மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஹரி. கடந்த டிசம்பர் 30ம் தேதி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத சிறுவன் தனது தாயிடம் காலில் முள் குத்தியதாக கூறியுள்ளான். இதனை அடுத்து அந்த சிறுவன் மயக்கம் அடைந்ததால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அப்பொழுது பணியில் இருந்த அரசு மருத்துவர் கஞ்சா, சிகரெட் அல்லது ஏதாவது போதை பொருளை சுவாதித்ததால் மயக்கம் அடைந்துள்ளான். போதை தெரிந்தவுடன் சிறுவன் சரியாகி விடுவான். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்ற சொல்லி அரசு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அச்சிறுவன் கண் விழிக்காமல் மறுநாள் கோமா நிலைக்கு சென்றுள்ளான்.

அப்பொழுது பணியில் இருந்த வேறு ஒரு மருத்துவர் சிறுவனை சோதித்ததில் நச்சுப் பாம்பு தீண்டியதால் உடல் முழுவதும் விஷம் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அச்சிறுவன் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான். 

தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார். சிறுவன் ஹரி உயிர் இழப்புக்கு காரணமான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மயிலாடுதுறை-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து நேரில் சென்று விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் லலிதா சிறுவனின் குடும்பத்திற்கு ஆட்சியரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறு செய்துள்ள மருத்துவர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உறுதியளித்துள்ளார். மருத்துவரின் அலட்சியத்தால் 8 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் மயிலாடுதுறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy dies after snakebite due to govt doctors negligence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->