காரில் வந்த பெண்களை துரத்திய இளைஞர்கள் - சென்னை ஈ.சி.ஆறில் நேர்ந்த அவலம்.!
boys following two girls in chennai ecr
சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நடுரோட்டில் நள்ளிரவில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை திமுக கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதனால் மற்றொரு காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணம் செய்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர். உடனே அந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர்.
இருப்பினும், அந்த பெண்கள் தங்களின் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
boys following two girls in chennai ecr