கள்ளக்குறிச்சி விஷ சாராயம் - சென்னையிலிருந்து மெத்தனால் வழங்கிய ஆலை! மொத்தம் 20 பேர் கைது!
Breaking News Kallakurichi Hooch Tragedy Methanol Chemical Factory
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கடந்த 18ஆம் தேதி துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வரை இவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 140-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். குறிப்பாக கள்ளச்சார வியாபாரி கன்னுகுட்டி மற்றும் மெத்தனால் வழங்கிய விவகாரத்தில் சிவக்குமார், மாதேஷ் என்ற இரண்டு முக்கிய புள்ளிகளையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் மெத்தனால் கொண்டுவரப்பட்ட சென்னை மாதவத்தை சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கெமிக்கல் ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராய வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ, அவர்கள் அனைவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் கல்வராயன் மலையை சுத்து போட்டு உள்ள போலீசார், கள்ளச்சார வியாபாரிகளையும், கள்ள சாராய ஊரல் பேரல்களையும் தீவிரமாக அழிக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Breaking News Kallakurichi Hooch Tragedy Methanol Chemical Factory