ஆங்கிலேயர்கள் நம் கல்வியை அழிக்க முயன்றனர் - ஆளுநர் ஆர். என்.ரவி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வக்கீல் பி.ஜெகன்நாத் எழுதிய 'சென்னையின் முதல் பூர்வீகக் குரல் - கஜுலு லட்சுமிநரசு செட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நூலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். இதைத்த தொடர்ந்து இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது:-

"நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது நமது கல்வி முறைப்படி கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 

ஆரியர்களைவிட சூத்திரர்களே நிறைய பேர் படித்தனர் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. ஆசிரியர்களில் பெரும்பாலான பேர் பிராமணர்களாக இருந்தனர். அதனால்தான் அவர்களை ஆங்கிலேயர்கள் குறிவைத்து நம் கல்வி முறையை அழிக்க முற்பட்டனர்.

நம் கல்வி முறையை மட்டுமின்றி நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டையும் அழிக்க அவர்களது கல்வியைப் பயன்படுத்தினர். அந்தக் காலக்கட்டத்தில் தான் கஜூலு லட்சுமிநரசு செட்டி சென்னையில் மெட்ராஸ் கிரெசென்ட் என்ற பத்திரிகையை தொடங்கி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.அவரைப் பற்றிய மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வெளிவர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

british tried destroyed our eduction system governor rn ravi speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->