தீவுத்திடலுக்கு இடமாறும் பிராட்வே - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை பிராட்வேயில் 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. 

இந்தத் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. அதன் பின்னர் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் ஒன்பது மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என்று அனைத்தையும் இணைக்கும் வகையில் ஏழு நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

broadway bus stand change theevuthidal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->