உண்மை குற்றவாளி, சிபிஐ விசாரணை, சட்டம் - ஒழுங்கு! தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கிய மாயாவதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வெட்டி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த அக்கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, இன்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் அர்ப்பணித்துடன் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். பகுஜன் சமாஜ் கட்சி என்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பட்டியல் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்துகிறேன். 

தமிழக அரசு எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. சட்டத்தை நமது கையில் எடுக்க வேண்டாம் என பகுஜன் சம்பத் கட்சி தொண்டர்களுக்கு நான் வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். 

ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்றும் பிடிக்கவில்லை. தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக செயல்பட்டு இருந்தால் உண்மையான குற்றவாளிகளை இந்நேரம் பிடித்திருக்கலாம். உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து தமிழக போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்" என்று மாயாவதி பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BS Party Mayawati Armstrong Death case CBI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->