பிஎஸ்சி நர்சிங் & பிஃபார்ம் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

நடப்பாண்டுக்காண பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவ துணை படிப்பதற்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (ஜூன் 28ஆம் தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.  எனவே மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிஎஸ்சி (நர்ஸிங்), பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர  tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகு துணை மருத்துவ படிப்பதற்கான கலந்தாய்வு தொடங்கும்.

இதில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இடம் கிடைத்தவர்கள் இந்த படிப்புகளில் சேர்வார்கள் என்பதால் இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bsc nursing and B Pharm application Last day of today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->