ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அப்பு கைது! வெளியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று போலீசாரால் தேடப்பட்ட வந்த முக்கிய ரவுடி டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கிட்டத்தட்ட கொலையாளிகளை நெருங்கி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. 

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த வழக்கில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரௌடியான புதூர் அப்புவை டெல்லி வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். 

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி ரவுடி அப்பு தான் இந்த கொலைக்கு வெடி குண்டு சப்ளை செய்ததாக தெரியவந்துள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட அப்புவை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong hacked to death case Rowdy Appu arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->