தஞ்சையில் தவிக்கும் பயணிகள் - பேருந்துகள் இயக்கப்படுமா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதியான இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இது குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், தீர்வு காணப்படததால் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் எல்.ரமேஷ் தலைமையில் பகல் 1 மணி அளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.

அதிலும், எந்த உடன்பாடும் ஏற்படாததால் அதுவும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் திட்டமிட்ட படி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பேருந்துகள் ஓடாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், தஞ்சையில் 125 பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் புதுக்கோட்டையில்  பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus not run in thanjavur bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->