திடீரென வாக்காளர் அடையாள அட்டை முகவரியை மாற்றிய புஸ்சி ஆனந்த்: இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


விஜய் ரசிகர் மன்றத்தில் கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 

விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜய் உத்தரவை பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் இயக்க பணிகளை தீவிரபடுத்தினார். 

பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டும் இல்லாமல் புதுச்சேரியிலும் செய்து வந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் ''தமிழக வெற்றிக் கழகம்'' என்ற கட்சியை தொடங்கி கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து விஜய் அடிக்கடி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதற்கிடையே புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்ஸி ஆனந்த் தேர்தல் பணிக்காக தற்போது தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bussy Anand address change voter ID


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->