அரக்கோணத்தில் பரபரப்பு!...எப்படி ஊருக்கு போறது?...ரயில் தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து கோவை செல்லும் பயணிகளும் ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலும் சிக்னல் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது.  அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் உள்ள யார்டு பகுதியில் ரயில் பெட்டியை சென்னை நோக்கி நகர்த்த ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த பகுதி தான் சிக்னல் வழங்கும் என்பதால், இந்த பகுதியில் ஏற்பட்ட கோளாறால் சென்னையில் இருந்து கோவை செல்லும் பயணிகளும் ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலும் அரக்கோணம் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டது.

சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் சரி செய்யப்பட்ட இந்த கோளாறில், முதலில் வந்த சென்னை கடற்கரை-அரக்கோணம் மின்சார ரயிலுக்கு பதிலாக கோவை செல்லும் விரைவு ரயில் இயக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த

இதனால் மின்சார ரயிலில் கோவை செல்வதற்காக வந்திருந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து, இப்போது கோவைக்கு எவ்வாறு செல்வது ஸ்டேஷன் மாஸ்டரிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து பின்னால் வந்த சதாப்தி ரயிலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்திய ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளை ஏற்றி கோவை அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Busy in arakkonam how to go to town passengers are protesting because the train is delayed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->