அய்யயோ போச்சு! திமுக அரசால் பதறிப்போன எடப்பாடி பழனிச்சாமி! கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்தை, திட்டமிட்டு செயல்படாமல் முடக்கி உள்ளதாக ஆளும் திமுக அரசு மீது, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான தலைவர், இயக்குனர் உள்ளிட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அரசு கேபிள் டிவி வளர்ச்சி பெற்றது. 

மேலும் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக 30 லட்சம் இணைப்புகளுடன் அரசு கேபிள் டிவி செயல்பட்டு வந்தது. 

மேலும் மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டிஜிட்டல் லைசென்ஸ் பெற்ற அரசு கேபிள் டிவி, 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள், 24 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநோகிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டதாக, அப்போதைய அதிமுக அரசு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், இந்த அரசு கேபிள் டிவியை தற்போதைய திமுக ஆட்சி முறையாக பராமரிக்காமல், 30 லட்சம் இணைப்புகள் இருந்ததை, தற்போது 10 லட்சமாக குறைத்து, அரசு கேபிள் டிவி முடக்கி உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சட்டி உள்ளார்.

மேலும், அவரின் அந்த அறிக்கையில், "கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 10 லட்சத்திற்கும் அதிகமான அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.

இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கும் விடியா திமுக அரசிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cable TV DMK Government of Tamil Nadu Edappadi Palaniswami 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->