அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் முறைகேடு.. சிஏஜி அறிக்கையில் அம்பலம்..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் தணிகை குழு அறிக்கையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை போன்ற முக்கியமான துறைகளை எடப்பாடி பழனிச்சாமி தனது வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்திக்கும், தனது குடும்பத்தினருக்கும் டெண்டர்களை ஒதுக்குவதற்காகவே தன்னிடம் வைத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை தெளிவுபடுத்தி உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் பேசியதாவது "எடப்பாடி பழனிச்சாமி கைவசம் இருந்த அந்த இரண்டு துறைகளிலும் டெண்டர் ஒதுக்குவதற்கான அடிப்படை விதிகள் எப்படி எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன. ஊழல் எப்படி எல்லாம் ஊக்கப்படுத்தப்பட்டது என்பதை புள்ளி விவரங்களோடு  சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. டெண்டர் முறைகேடு உச்சமாக அரசு அதிகாரிகளின் கணினிகளை பயன்படுத்தி ஒப்பந்த புள்ளிகளை பதிவு செய்யும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கவனித்து வந்த நெடுஞ்சாலை துறையில் அரசு இயந்திரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். அதிகாரிகளின் வசமுள்ள கணினிகளில் மூலமே ஒப்பந்தக்காரர்கள் டெண்டர்களை தாக்கல் செய்திருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2,091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் கூறப்பட்ட 907 ஒப்பந்த புள்ளிகளில் ஒவ்வொரு ஒப்பந்த புள்ளிக்கும் இரண்டு முதல் நான்கு விண்ணப்பங்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற எந்த ஒப்பந்ததாரர்களையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்காமல் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே ஒரே குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு ஐபி முகவரியில் மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 490 டென்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளது சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது. இது அப்பட்டமான விதிமுறை என்றும் சிஏஜி அறிக்கை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக பொய்யான போலியான ஒப்பந்ததாரர்களை ஏலத்தில் பங்கேற்றது போல் காட்டி எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர்களுக்கும் அவருக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு ஐபி முகவரியில் இருந்து ஆன்லைன் ஒப்பந்த புள்ளிகள் கூறப்பட்டுள்ளது சுட்டிக்காட்டி அதன் மூலம் அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் நடந்த மெகா ஊழலை சிஏஜி அம்பலப்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்து, அரசு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளை பெற்றதையும் சிஏஜி இன்று அம்பலப்படுத்தி உள்ளது" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CAG report exposes irregularity in awarding tenders in AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->