கொடைக்கானலில் வனப்பகுதிக்கு செல்ல முடியாது?...இதோ போலீஸ் போட்ட அந்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்ட கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே கொடைக்கானல் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம்  ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது சோதனை சாவடிகளில் நுழைவு கட்டணம் வசூலிப்பதால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, கோக்கர்ஸ்வாக், பசுமை பள்ளத்தாக்கு வழியாக பில்லர்ராக் உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்பவர்கள் இன்று முதல் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என்றும், பின்னர் மீண்டும் அப்சர்வேட்டரி வழியாக நகருக்குள் திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can not go to the forest area in kodaikanal here is the action order issued by the police


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->