கடலில் எல்லைச் சுவரா கட்ட முடியும்? இலங்கை அரசை கண்டித்து போராட்டம் - கி.வீரமணி! - Seithipunal
Seithipunal


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்ய இயலாதபடி, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்படும் தடைகளும், சோதனைகளும், வேதனைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகக் காட்சிகளாகவும், சொல்லொணா துயர தொடர் கதைகளாகவும் தொடர்ந்து கொண்டே உள்ளன!

அண்மையில், நமது மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் வழமைகளைத்தாண்டி, மேலும் கொடுமையாக அவர்களது தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் மனிதநேயமற்றச் செயலையும் இலங்கை அரசு செய்துள்ளது!

நிலப் பகுதியில் எல்லையைக் காக்க முள்வேலிகளோ, தடுப்புச் சுவர்களோ பல நாட்டு எல்லைகளில் போடு வதைப்போல, கடலில் எல்லைச் சுவரா கட்ட முடியும்?
ஒன்றிய இணையமைச்சர் ஒருவர், ‘‘தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பல பாதுகாப்பு கருவிகளைத் தந்துள்ளோம்’’ என்று ஏதோ விளக்கெண்ணெய்க்கு விளக்கம் தந்து, அரசியல் தூண்டிலைத் தூக்கிக் காட்டுவதுதான் சரியான பரிகாரமா? நிரந்தரத் தீர்வா?


இதனைக் கண்டித்து, நமது மீனவர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையைக் காக்கும் வகையில், ஒன்றிய அரசை வலியுறுத்தி, ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் பரப்புரைக் கூட்டம், நாகையில், எனது
(கி.வீரமணி) தலைமையில் 1.10.2024 அன்று மாலை
4 மணிக்குத் தொடங்கி, இரவு எட்டு மணிவரை நடைபெற, நாகை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்கின்றனர்!

தி.மு.க. முதல் அத்துணைத் தோழமைக் கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Can we build a border wall in the sea protest against the sri Lankan government K Veeramani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->