தேனியில் 60அடி பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்து..!
Car falls into a 60 foot gorge in Theni.
தேனியில் கார் ஒன்று 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பகுதியியில் காரில் 4 பேர் பயணித்தனர். அப்போது, குறித்த கார் போடி மெட்டு சோதனைச்சாவடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றி எறிந்துள்ளது.
காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விபத்தின்போது காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் 02 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேவேளை, பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றிய கார் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Car falls into a 60 foot gorge in Theni.