முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. 

அந்தப் புகாரில் கடந்த 2015-16 காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அந்தப் புகாரின் படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வைத்திலிங்கத்தின் மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர்களிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on ex admk minister vaithilingam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->