தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு - நடந்தது என்ன?
case file on tamilnadu bjp leader annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது, அவர் பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், அண்ணாமலையை ஆலயத்திற்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர்.
அதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர். அப்போது மணிப்பூர் கலவரம் குறித்து தகவல் எழுப்பியதற்கு, மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர்.
அதன் பிறகு ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை அங்கு மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
case file on tamilnadu bjp leader annamalai