அனுமதி இன்றி போராட்டம் பாஜகவினர் 86 பேர் மீது வழக்கு பதிவு..!
Case file to 86 bjp excuetives for protest without permission
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூபாய் ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக கட்சி அறிவித்தது.
பாஜக தலைமையின் அறிவிப்பின்படி, நேற்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, பாண்டியன் சாலை சிந்தாதிரிப்பேட்டை புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் நுழைவாயில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதாவது சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் போராட்டம் நடத்த வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் போலீசார் கைது செய்தனர். இதே போல் தலைவர் ஹெச். ராஜா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட 86 பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Case file to 86 bjp excuetives for protest without permission