பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் இந்த சூழலில் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடந்த ஓராண்டுக்கு மேலாக விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வரும் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் நேற்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் மண்டபங்களிலும் சமுதாய கூடங்களிலும் அடைத்தனர்.

இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்குழு மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் என 137 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against 137 people protest against parandur Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->