சிதம்பரம் கோவிலில் மீண்டும் பதற்றம்.. பெண் அதிகாரியின் பரபரப்பு புகார்.. தீட்சிதர்கள் மீது பாய்ந்த வழக்கு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கோவில் நகைகள், கணக்கு வழக்குகளை சரி பார்த்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை அனுமதிக்காமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கோவில் நகைகள் மற்றும் கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சிற்றம்பல மேடை என அழைக்கப்படும் கனகசபை மீது ஏறி நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. கொரோனா காலகட்டத்தில் திருச்சிற்றம்பலம் மேடை மீது தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகும் அதனை தீட்சிதர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். 

பெரும்பாலான தீட்சிதழ்கள் திருச்சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏரி தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சில தீட்சிதர்கள் அதனை எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 10 நாட்களாக நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நிலையில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி தரிசனம் செய்ய ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தடை விதித்து பொது தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியோடு அந்த பதாகையை அகற்றினர்.

இதனால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தீட்சிதர்கள் கோவில் நடையை உள்பக்கமாக தாழிட்டு கனகசபையின் மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயலர் சரண்யா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பல்வேறு பிரிவுகளுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against Chidambaram nataraja temple dikshidars


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->