தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21ம் தேதி மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

அந்த வகையில் வேல்முருகன், பாலமுருகன், மாதவன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படை இரும்பு பைப்பால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்து பொறையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றும், மீனவர்களை தாக்கிய கடற்படையினர் மீது தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed against the Sri Lankan Navy for attacking 6 fishermen from Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->