பூட்டிய வீட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை..வாலிபர் கைது!  - Seithipunal
Seithipunal


திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தரவேலின் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 11க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. 


திருபுவனை அருகே கலிதீர்த்தால்குப்பத்தில் பூட்டிய வீட்டுக்குள் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபர் கைது.  கலிதீர்த்தால்குப்பம் மனவெளி தெருவை சேர்ந்தவர் அரிராம் 45,  இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார். இவருடைய மனைவி நிலையில்அருண்மொழி 41,  மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது மகள் மற்றும் மகனை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு அனுப்பி விட்டு, அதன் பிறகு வீட்டு வேலைகளை முடித்து,  வீட்டினை பூட்டிக்கொண்டு சன் னியாசிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். 

இதனை அறிந்து நோட்டம் விட்ட  அருண்மொழியின் வீட்டின் பின்புறம் உள்ள கதவின் வழியாக உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரொக்கம் 5 ஆயிரத்தை திருடி கொண்டு சென்றுவிட்டார்.மாலை 4 மணி அளவில் அருண்மொழியின் மகள் மற்றும் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து, வீட்டிலிருந்த பீரோ திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையினை யாரோ திருடி சென்று விட்டார்கள் என்று தங்கள் அம்மாவிற்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அருண்மொழியை திருபுவனை காவல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு பிரிவு எஸ் பி. வம்சிதரெட்டி, திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு, சந்தேக நபரின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை நடத்தி .வந்தார்கள்.. 

இந்த  நிலையில் பண்ருட்டி அருகே உள்ள சோலை கவுண்டர்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் சுந்தரவேலு 24 என்பவர் மதகடிப்பட்டு தனியார் மதுபான கடை அருகில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் செலவிற்க்கு பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தார் அப்போது சிலர் திருபுவனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.. தகவல் அறிந்து திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் குற்றவியல் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி ஆகியோர்  மதகடிப்பட்டு சென்று சுந்தரவேலுவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சென்று கடந்த  ஏப்.7தேதி கலிதீர்த்தால் குப்பத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அவரிடம் இருந்து 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரோக்கம் 5 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றி, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தார்கள். 

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தரவேலின் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 11க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cash and jewellery stolen from a locked house. Young man arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->