சமூகத்தை பிளவுபடுத்தும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது; சென்னை உயர்நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


''சமூகத்தை பிளவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ளது,'' என சென்னை உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது. கோவை ஆவல்பட்டியில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் இரு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் போது வழக்கை விசாரித்த விசாரித்த நீதிமன்றம் கலவரங்களை தூண்டும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் கோரிக்கை அரசியலமைப்பு பொது கொள்கைக்கு விரோதமானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலனை செய்யாது என்று அதிரடியாக கூறியுள்ளது.

இந்த வழக்கு ' பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்' என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. ஜாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. என்று சென்னை உயர்நீதிமன்றம் கருது தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste that divides society is against development Madras High Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->