காவேரி விவகாரம் | தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி செய்தி! உச்சநீதிமன்ற அறிவிப்பு!
Cauvery issue SC Case TNGovt 06092023
காவிரி வழக்கை உடனடியாக விசாரிக்க தமிழ்நாடு அரசு முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை வரும் 21ம் தேதி தான் விசாரணை செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், மிஸ்ரா அமர்வு முன்பு இவ்வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது.
அடுத்த வாரம் விடுப்பில் செல்ல உள்ளதாக நீதிபதி கவாய் தகவல் தெரிவித்து உள்ள நிலையில், 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமே வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற அறிவிப்பால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க இந்த மாதம் கடைசிவரை காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
English Summary
Cauvery issue SC Case TNGovt 06092023