காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு..!! 4,200 கன அடியில் இருந்து 6,300 கன அடியாக உயர்வு! - Seithipunal
Seithipunal


காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடிய கூட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆனால் கர்நாடக அதிகாரிகள் மட்டும் வீடிரோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.இந்தக்கூட்டத்தில் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று நீர் திறப்பு 4,293 கன அடியில் இருந்து 6,398 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,393 கன அடியும், கபினி அணையில் இருந்து 2000 கன அடியும் என மொத்தம் 6,393 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 24 நாட்களுக்குப்பிறகு ஆயிரம் கன அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. பாசனத்திற்கு 8000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து 792 கன அடியாக உள்ளது. நீர் திறப்பை விட வரத்து குறைவாக இருப்பதால்,அணையின் நீர் மட்டம் 51.98 அடியாக சரிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery Water level increase 30082023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->