கள்ளச்சாராய விவகாரம்.. 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு.. அதிரடி காட்டும் சிபிசிஐடி.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த மே 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குறித்து 70 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த மே 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் வழக்கை சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியும், செங்கல்பட்டு விசாரணை அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் விழுப்புரம்த்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி கோமதியிடம் இன்று காலை ஒப்படைத்தார்

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID field Murder case registered against 12 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->