வேங்கைவயல் விவகாரம் - வழக்கை ஜுடிசியல் நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்
cbcid request vengaivayal case change judicial case
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை சேர்ந்தவர்கள் மீது போலீசார் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கை புதுக்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண்-2-க்கு மாற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தியிடம் வலியுறுத்தினார்.
மேலும் அதற்கான கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை n நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
English Summary
cbcid request vengaivayal case change judicial case