திடீர் சோதனையால் கரூரில் பதற்றம்! விஜயபாஸ்கருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை! சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உட்பட 3 பேர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்தது விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை, கரூர் உட்பட 8 இடங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தம் ஆன வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து, கரூர், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திருவிக சாலை உள்ள எம்ஆர்பி ட்ரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் சோதனை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 குழுக்களை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். திடீர் சோதனை காரணமாக கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கரூர் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid test at 8 places owned by Vijayabaskar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->