தமிழக தாது மணல் கொள்ளை! ரூ.5,832.29 கோடி இழப்பு! சிபிஐ ரெய்டில் அம்பலம்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் கடற்கரை மணல் தாதுக்களின் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. 

2000 முதல் 2017 வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மணல் தாதுக்கள் வெட்டெடுக்கப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக புகாரை விசாரணை செய்ய சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, சிபிஐ ஏழு தனிப்பட்ட வழக்குகளை பதிவு செய்து, 21 நபர்கள், 6 நிறுவனங்கள் மற்றும் பலர் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. 

சுரங்க நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் கூட்டாளிகள், அதிகாரிகளைச் சேர்த்து, தவறான முறையில் சுரங்க அனுமதி பெற்று, மத்திய கனிமவியல் மற்றும் அணுசக்தி சட்டங்களை மீறியதாக கூறப்படுகிறது.  

இந்த நடவடிக்கைகள் மூலம் மாநில அரசுக்கு சுமார் ரூ.5,832.29 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. பீச் சாண்டு மினரல்ஸ் தொடர்பான விவகாரங்களில் ஈடுபட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBI case report Beach sand Robbery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->