ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..பக்கதர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!
Cell phones banned inside Srivilliputhur Andal temple Sudden control for the devotees
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைத்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருகோவில். இ்ந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ,பல நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்பட்டு,பாதுகாப்பு அறையில் வைக்க ஒவ்ஒரு செல்போனுக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பு அறையில் செல்போனை வைத்து சென்றனர்.மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு செல்போன்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு, தரிசனம் முடித்து வரும்வரை பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cell phones banned inside Srivilliputhur Andal temple Sudden control for the devotees