நாங்க என்ன தாழ்த்தப்பட்ட மக்களா! திமுக தயாநிதி மாறன் மீது PCR சட்டத்தில் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்டோர் மக்களை போன்று மூன்றாம் தர மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்தது அடுத்து தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் விசாரணைக்கு  அழைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Crime Branch police registered a case against dayanidhi Maran under the Prevention of Atrocities Act


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->