பரந்தூர் விமான நிலையம்! மாநில அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் மும்முறமாக நடந்து வருகிறது.

விமான நிலையம் அமைப்பதற்காக பர]ந்தூர் சுற்றியுள்ள ஏகனாபுரம், வளத்தூர், கொட்டவாக்கம், அக்காமாபுரம், வேளியூர் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம்  கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணியை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. மக்களவையில் நேற்று விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்று விமான நிலையம் பரந்தூரில் அமைய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்ததாவது, பசுமைவெளி விமான நிலைய கொள்கை 2008 இன் படி தமிழ்நாடு அரசு டிட்கோ சார்பில் பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் சிவிலை விமான போக்குவரத்து துறை  உள்ளிட்டவர்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பசுமைவெளி விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு இந்த பரிந்துரையை வழங்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி அளித்து 9.7.2024 ஆம் தேதி பரிந்துரைத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government approved the Parantur airport on the recommendation of the Tamil Nadu state government


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->