பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி.?
Central govt scholarship how to apply
பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
எனவே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் http://www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டு மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
English Summary
Central govt scholarship how to apply