மத்திய அரசின் சிறந்த பஞ்சாயத்து - முதலிடத்தை தட்டிச்சென்ற நம் தமிழகத்தை சேர்ந்த கிராமம்.!
Central Ministry of Water Power Award WON VALLAPUTHUR
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் சார்பில் 2020ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் நீர் மேலாண்மை சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டாக கடந்த 2020ம் ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இந்த விருதுகளை இன்று தலைநகர் டெல்லியில் அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில் இந்த முறை உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலமும், மூன்றாவது இடத்தில் தமிழகம் பிடித்துள்ளது.
இதில், தெற்கு மண்டலத்தில் இருக்க கூடிய சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வெள்ள புதூர் கிராமம் முதல் இடம்பிடித்துள்ளது.
English Summary
Central Ministry of Water Power Award WON VALLAPUTHUR