தனுஷ்கோடியில் மிதந்த தங்க கட்டிகளை மடக்கி பிடித்த அதிகாரிகள்.! இத்தனை கிலோவா.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நாட்டுப்படகில் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தனி படகில் தனுஷ்கோடி கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நாட்டு படகு ஒன்று அதிகாரிகளை கண்டதும் திரும்பிச் செல்ல முயன்றது.

அப்போது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த படகை பின் தொடர்ந்து மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். படகில் பயணித்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் படகில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 10 கிலோ தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

மேலும் படக்கில் பயணித்த 4 பேரையும் கைது செய்து மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தங்கம் கடத்தல் தொடர்பாக மேலும் சிலர் அப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தனுஷ்கோடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Revenue Intelligence seized 10kg smuggled gold in Dhanushkodi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->