ராஜிவ்காந்தி வழக்கு || முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை செல்வது எப்போது? நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல வருடங்களாக சிறையில் இருந்த குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், முருகன், ராபர்ட் உள்ளிட்ட 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீது பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாமில் உள்ள 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு பெற இந்தியாவிற்கான இலங்கை துணை தூதகரத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தரப்பிலிருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்" என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Centralgovt informed steps taken to send RajivGandhi case convicts to SriLanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->