தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!
Certificates can be submitted till October 23 to enroll in LLB courses in private law colleges
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளில், 3 ஆண்டு எல்எல்பி (LLB) படிப்பில் சேர்வதற்கான சான்றிதழ்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கான காலக்கெடு அக். 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ளார். இதன்படி, கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை அக்.23 மாலை 5.45 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு அன்றே நிறைவடையும்.
கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை அக்.26-ல் இணையவழியில் வெளியிடப்படும். மாணவர்கள் அதற்கமைய ஆவணங்களை பெற்றுக் கொண்டு, அக்.28 முதல் 30-ம் தேதி வரை தொடர்புடைய கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Certificates can be submitted till October 23 to enroll in LLB courses in private law colleges