ஆளுநரின் மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள் - அதிர்ச்சியில் ஊட்டி ராஜ்பவன்.!
chancellors avoide ooty chancellors conference
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிலையில் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் புறக்கணித்துள்ளனர். இதனால் ஆளுநர் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.
இதேபோல், துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜ்மேலும், போராட்டத்துக்காக வருபவர்களை அந்தந்த இடங்களிலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
English Summary
chancellors avoide ooty chancellors conference