தமிழகத்தில் மீண்டும் ஓர் தேர் விபத்து.. நள்ளிரவில் நடந்த சோகம்.!!
chariat accident in nalai
நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். முட்டுக்கட்டை போட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் போது முட்டுக்கட்டை போடுவது வழக்கம். அப்போது தான் தேரை நிலைநிறுத்த முடியும் என்பதால் முட்டுக்கட்டை போடப்படுபடும். கோவில் திருவிழாவில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தேர் புறப்பட்டு 2 மணி நேரத்திற்குப் பின்பு இந்த விபத்து நடைபெற்றதுள்ளது. முட்டுக்கட்டை போடுவதற்காக 4 தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். முட்டுக்கட்டைப் போட்ட போது தீப ராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி தீப ராஜன் உடனடியாக சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதற்கு முன்பு தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் நடந்த தேர்விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
chariat accident in nalai