#Breaking :: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு! உபரி நீர் திறப்பு அதிகரிக்க கூடும்!
Chembarampakkam lakes water level is rising
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 21 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், திருவள்ளூர் உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்த அதிகரித்துள்ளது. தற்பொழுது ஏரிக்கு வரும் நீரின் அளவானது 642 கன அடியாக இருந்து வருகிறது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3,640 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2,850 மில்லியன் கன அடியாக நீரின் அளவு உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மூன்று நாட்களாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிவுடன் உபரி நீர் திறப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு எரி சுற்றிலும் நீர்வளத் துறை அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு வருகின்றனர்.
English Summary
Chembarampakkam lakes water level is rising