விவசாயிகளுக்கு மாஸ்க் கட்டாயம்... செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு..!!
Chengalpattu Collector ordered mask mandatory for farmers
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் ஏப்ரல் 20-ம் தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கையானது 500 நெருங்கி உள்ள நிலையில் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை விட்டு அமர்ந்து விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Chengalpattu Collector ordered mask mandatory for farmers